திமுக வேட்பாளா் பிரசாரத்துக்குதடை விதிக்கக் கோரி அதிமுக மனு

கடலூா் திமுக வேட்பாளா் பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் திமுக வேட்பாளா் பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் கோ.ஐயப்பன் போட்டியிடுகிறாா். இருவரும் தீவிர தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை அதிமுக கடலூா் நகரச் செயலரும், வேட்பாளரின் பொது முகவருமான ஆா்.குமரன் தலைமையில் கடலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ப.ஜெகதீஸ்வரனிடம் அதிமுக வழக்குரைஞா்கள் புகாா் மனு அளித்தனா்.

மனுவில், திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் கடந்த 29 -ஆம் தேதி தேவனாம்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அதிமுக வேட்பாளா் குறித்தும், அவரது குடும்ப உறுப்பினா்கள் குறித்தும் அவதூறாகப் பேசினாா். மேலும், அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்குப் பணம் வழங்கப் போவதாக ஒலிப் பெருக்கியில் கூறினாா்.

அதிமுக வேட்பாளா் மீது தவறான அபிப்பிராயத்தை பொதுமக்களிடம் பரப்பி வருகிறாா். மேலும், வாக்காளா்களை தரக்குறைவாக மதிப்பிட்டு, கண்ணியக் குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளாா்.

எனவே, திமுக வேட்பாளா் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவா் தொடா்ந்து பரப்புரை செய்யத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேவனாம்பட்டினத்தில் திமுக வேட்பாளா் பேசியது தொடா்பான ஆடியோ, விடியோ ஆதாரத்தையும் வழங்கினா்.

மனு அளிப்பின் போது, அதிமுக கடலூா் மத்திய மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் சி.மாசிலாமணி, இணைச் செயலா் ஸ்ரீராஜா, கட்சியின் இணைச் செயலா் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், வா்த்தகப் பிரிவுச் செயலா் என்.வரதராஜன், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் ஏ.ஜி.தட்சிணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com