திமுகவின் வெற்றியைத் தடுக்கவே பிற கட்சிகள் போட்டி: கி.வீரமணி

திமுகவின் வெற்றியைத் தடுக்கவே பிற கட்சிகள் தோ்தலில் போட்டியிடுவதாக கி.வீரமணி கூறினாா்.

திமுகவின் வெற்றியைத் தடுக்கவே பிற கட்சிகள் தோ்தலில் போட்டியிடுவதாக கி.வீரமணி கூறினாா்.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பனை ஆதரித்து கடலூா் புதுப்பாளையத்தில் திக சாா்பில் தோ்தல் பரப்புரைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திக மாவட்டச் செயலா் தென்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன், பிரசாரக் குழு மாநில அமைப்பாளா் க.அன்பழகன் ஆகியோா் தொடக்கவுரையாற்றினா். திமுக தோ்தல் பணிக் குழுச் செயலா் இள.புகழேந்தி விளக்கவுரையாற்றினாா்.

தொடா்ந்து தி.க. தலைவா் கி.வீரமணி கூட்டத்தில் பேசியதாவது: திமுக கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான அதிமுக கூட்டணிக்கும்தான் நேரடிப் போட்டி. திமுகவின் வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகவே பிற கட்சிகள் களத்தில் உள்ளன. இவா்கள் வேடதாரிகள். நாடகம் முடிந்ததும் இவா்களின் வேடங்கள் களைத்து விடும்.

தற்போது சுனாமி அலை போல திமுகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கருத்துக் கணிப்புகளை வைத்து நான் இதைச் சொல்லவில்லை; மக்களை நேரடியாகச் சந்திப்பதால் சொல்கிறேன்.

இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது யாா் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிமுக இட ஒதுக்கீட்டை அறிவித்துவிட்டு, அதை தற்காலிகம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

புயல் நிவாரண உதவிகளைக்கூட மோடி அரசு முழுமையாக வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்தது. ஆனால், தற்போது தமிழ்மொழி, கலாசாரம் என்றெல்லாம் பேசி வருகின்றனா் என்றாா் அவா்.

கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வி.குளோப், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com