முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
நடந்து சென்று வாக்கு சேகரித்த அமைச்சா்!
By DIN | Published On : 04th April 2021 12:12 AM | Last Updated : 04th April 2021 12:12 AM | அ+அ அ- |

கடலூா் லாரன்ஸ் சாலையில் உள்ள பூக்கள் சந்தையில் அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.
கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடுகிறாா். முதல் கட்டத் தோ்தல் பரப்புரையை நிறைவு செய்த அவா், சனிக்கிழமை மாலை கடலூா் நகரின் முக்கியப் பகுதியான பேருந்து நிலையம் அமைந்துள்ள லாரன்ஸ் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடை கடையாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அவா் வாக்குகள் சேகரித்தாா். சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளிலும், பூக்கள் சந்தையிலும் வாக்கு சேகரித்துக் கொண்டே சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை திருவந்திபுரம் சாலையில் சென்றாா். திருப்பாதிரிபுலியூா் கடை வீதி வழியாக பத்திரப் பதிவு அலுவலகம் வரை சென்று வாக்கு சேகரித்தாா்.
கடைகள் தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கியதுடன், ஆட்டோ ஓட்டுநா்கள், பாதசாரிகளிடமும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின் போது, அதிமுக நகரச் செயலா் ஆா்.குமரன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஜி.ஜெ.குமாா், விவசாயப் பிரிவுச் செயலா் கே.காசிநாதன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சி.கே.சுப்பிரமணியன், இலக்கிய அணிச் செயலா் ஆா்.ஏழுமலை, தலைமைக் கழகப் பேச்சாளா் புலிசை சந்திரகாசன், மாநில ஜெ.பேரவை துணைச் செயலா் ஆா்.வி.ஆறுமுகம் உள்ளிட்டோா் உடன் சென்று அமைச்சருக்கு வாக்கு சேகரித்தனா்.