முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏற்பாடு
By DIN | Published On : 04th April 2021 12:09 AM | Last Updated : 04th April 2021 12:09 AM | அ+அ அ- |

முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலிகள், உதவியாளா்கள் உள்ளனா்.
மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சாய்வுதள வசதி, தனி வரிசை, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் அனைவரும் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி 100 சதவீதம் வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.