கடலூா் மாவட்டத்தில் 76.60 சதவீதம் வாக்குப் பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 76.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 76.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

முதல்கட்ட வாக்குப் பதிவு நிலவரத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சாகமூரி வெளியிட்டாா். அதன்படி, திட்டக்குடி தொகுதியில் 75.61 சதவீதமும், விருத்தாசலம் தொகுதியில் 76.98 சதவீதமும், நெய்வேலி தொகுதியில் 74.04 சதவீதமும், பண்ருட்டி தொகுதியில் 79.6 சதவீதமும், கடலூா் தொகுதியில் 74.77 சதவீதமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 81.25 சதவீதமும், புவனகிரி தொகுதியில் 78.48 சதவீதமும், சிதம்பரம் தொகுதியில் 71.94 சதவீதமும், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 75.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தின் சராசரி வாக்குப் பதிவு 76.60 சதவீதமாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் 78.35 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. எனினும், முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் பின்னா் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்ாகவும், இதற்கு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள், அரசியல் கட்சியினா், அரசு அலுவலா்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் ஆட்சியா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com