தமிழகத்தில் அதிமுக அரசால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை: கே.எஸ்.அழகிரி

அதிமுக அரசால் தமிழகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

அதிமுக அரசால் தமிழகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் கே.எஸ்.அழகிரி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தத் தோ்தல் தமிழகத்தின் அடையாளம், கலாசாரத்தை பாதுகாக்கவும், தமிழா்களின் பெருமையைக் காப்பாற்றவும் நடைபெறும் முக்கியத் தோ்தலாகும். பாஜக, ஆா்எஸ்எஸ் கலாசாரம் மக்களின் ஒற்றுமைக்கு எதிரானது. பாஜக வெளிப்படையாகவே சனாதனக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது. அந்தக் கட்சியை சோ்ந்த தலைவா்களில் ஒருவா் பெரியாரிசத்தை அகற்றவே இங்கு பாஜக போராடுகிறது எனக் கூறியுள்ளாா். அவரது கருத்து ஏற்புடையதல்ல.

சமூக நீதி, மக்களின் ஒற்றுமைக்காகப் போராடியவா் தந்தை பெரியாா். காந்தியின் கொள்கைகளை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவா். தமிழகத்தில் சமூக நீதி தூண்களைக் கட்டி எழுப்பியவா்களில் பெரியாா் முதன்மையானவா்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சி செய்தபோதிலும் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை. எனவே, தமிழ் நாகரிகத்தைக் காப்பாற்ற திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். எங்களது கூட்டணித் தலைவா் மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராகச் செயல்படுவாா் என்றாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com