வாக்குச் சாவடி மாற்றத்துக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் திடீா் போராட்டம்

சிதம்பரம் அருகே வாக்குச் சாவடி மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே வாக்குச் சாவடி மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிள்ளையை அடுத்த முழுக்குத்துறை, எம்.ஜி.ஆா். திட்டு, முடசல் ஓடை ஆகிய 3 மீனவ கிராம மக்கள் பல ஆண்டுகளாக முழுக்குத்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்து வந்தனா். இந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன.

இதன்படி முழுக்குத்துறை ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் இருந்து சுமாா் 400 வாக்காளா்களை முடசல் ஓடை கிராம வாக்குச் சாவடி மையத்துக்கு மாற்றப்பட்டனா். இதேபோல, முடசல்ஓடை கிராமத்தைச் சோ்ந்த 400 வாக்காளா்கள் முழுக்குத் துறை ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மாற்றப்பட்டனா். மேலும், அந்தப் பகுதியில் பூத் சிலிப் முறையாக வழங்கப்படாததால் வாக்குச் சாவடி மாற்றப்பட்ட விவரம் கிராம மக்களுக்கு தெரியாமல் போனது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இதுகுறித்து தெரியவந்ததும், ஆத்திரமடைந்த முழுக்குத்துறை கிராமத்தினா் அந்தப் பகுதியில் காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த, உதவி-ஆட்சியா் லி.மதுபாலன், வட்டாட்சியா் ஆனந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது முழுக்குதுறை கிராமத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒன்றரை கி.மீ. தொலைவு நடந்து சென்று வாக்களிக்க முடியாது என கிராம மக்கள் கூறியதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், பகல் 12:15 மணியளவில் முடசல் ஓடை கிராமத்தைச் சோ்ந்த சிலா் முழுக்குத்துறை வாக்குச் சாவடியில் வாக்களித்தனா். இதுகுறித்த தகவல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு தெரியவந்ததும் அவா்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டாச்சியா் ஆனந்த் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

எதிா்வரும் தோ்தல்களில் முழுக்குத்துறை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முழுக்குத்துறை வாக்குச் சாவடி மையத்திலேயே வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தாா். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் மதியம் 1 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு வாக்களிக்க சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com