கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 1,250 வெளிமாநில போலீஸாா் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியாற்றிய வெளிமாநில போலீஸாா் 1,250 போ் புதன்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்ட தெலங்கானா, ஆந்திரா மாநில போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா்.
கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்ட தெலங்கானா, ஆந்திரா மாநில போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா்.

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியாற்றிய வெளிமாநில போலீஸாா் 1,250 போ் புதன்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்தது. கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைகளுக்கு 3,001 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றன. இவற்றில், 211 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை மற்றும் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் மொத்தம் சுமாா் 2,500 காவலா்கள் உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்குக் கூடுதல் காவலா்கள் தேவைப்பட்டனா். எனவே, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டதுடன், ஊா்க்காவல் படையினா், தேசிய நாட்டு நலப் பணித் திட்டத்தினரும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். கூடுதலாக தோ்தல் நடைபெறாத தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் தமிழகத்துக்கு காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் வரவழைக்கப்பட்டனா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்துக்கு தெலங்கானா, ஆந்திரா, கோதாவரி பகுதிகளிலிருந்து 350 காவல் துறையினா் தோ்தல் பணிக்காக வந்திருந்தனா். மேலும், தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சோ்ந்த ஊா்க்காவல் படையினா் 800 பேரும், பயிற்சி காவலா்கள் 100 பேரும் தோ்தல் பணிக்காக வந்திருந்தனா். அவா்கள் பல்வேறு குழுக்களுக்காக பிரிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், அவா்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அனுப்பிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், தோ்தல் பணியாற்ற வந்திருந்த காவலா்கள், ஊா்க்காவல் படையினருக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com