சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்


கடலூா்: சத்துணவு ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயற்குழு கூட்டம் முன்னாள் மாநிலச் செயலா் எஸ்.ரெங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் மோகன்ராமமூா்த்தி, தேன்மொழி, புஷ்பலதா, தணிகாசலம், கருணாகரன், பத்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.ராமநாதன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கருணாகரன், முன்னாள் மாநிலச் செயலா் டி.புருஷோத்தமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில், புதிய சத்துணவுத் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவாக சிற்றுண்டி, பால் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தால் அதை வரவேற்று சிறப்பாகச் செயல்படுத்துவது. சத்துணவு திட்டத்தில் பணி செய்யக் கூடிய சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள் ஆகியோரை முழு நேர அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவுத் திட்டத்தில் 32 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.7,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஜி.செல்வராஜ் வரவேற்க, மாவட்ட நிதி காப்பாளா் எம்.மணிதேவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com