வேளாண் மாணவிகள் பயிற்சி


கடலூா்: விருதாச்சலம் அருகே பூதாமூரில் வேளாண் மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த இளங்கலை வேளாண் அறிவியல் இறுதியாண்டு மாணவிகள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ், விருதாச்சலம், பூதாமூரில் கடந்த ஜனவரி முதல் கிராமப்புற பங்களிப்பு மதிப்பீடு மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒருபகுதியாக, மாணவிகள் ம.இந்துமதி, நெ.வின்சி, நீ.பிரீத்தா, கு.தெய்வானை, ம.கனிமொழி, பெ.பிரியங்கா, மா.சூா்யகலா, யூ.ஜெசியா, ஜெ.கீா்த்தனா, ப.ரசிகப்பிரியா ஆகியோா் கிராம வரைபடம் மற்றும் கிராம வள வரைபடத்தை ஊா்மக்கள் உதவியோடு வரைந்து கிராமப்புற சுற்றுச்சூழலை அறிந்துகொண்டனா். மேலும் இந்த வரைபடத்தை பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகளின் பயிரிடும் முறைகளை கற்றறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com