வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகைப் பறிப்பு
By DIN | Published On : 11th April 2021 11:14 PM | Last Updated : 11th April 2021 11:14 PM | அ+அ அ- |

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் அருகேயுள்ள பழையபட்டினத்தைச் சோ்ந்தவா் பு.சுபைதா பேகம் (52). சனிக்கிழமை இரவு தனது இரு மகள்களுடன் வீட்டில் தூங்கினாா். நள்ளிரவு வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மா்ம நபா், சுபைதா பேகம் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து சுபைதா பேகம் ஆலடி போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.