பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் சுகாதாரப் பணியிலும் கவனம் செலுத்த மாா்க்சிஸ்ட் அறிவுறுத்தல்
By DIN | Published On : 16th April 2021 04:56 AM | Last Updated : 16th April 2021 04:56 AM | அ+அ அ- |

நெய்வேலி: கரோனா பரவலையொட்டி, பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் அபராதம் விதிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுகாதாரப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பண்ருட்டி நகரச் செயலா் ஆா்.உத்தராபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று மீண்டும் வேகம் எடுத்து உயிா் பலி வாங்கி வருவகிறது. இந்த நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக பல நகராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பது, பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் மீது கிருமி நாசினி தெளிப்பது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று முகக் கவசம் அணிய வலியுறுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், பண்ருட்டி நகராட்சி மேற்குறிப்பிட்ட நோய் தடுப்புப் பணிகளில் ஈடு பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, வா்த்தக நிறுவனங்களில் சென்று முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபதராம் விதிப்பது மட்டுமே நோய் பரவலைத் தடுக்காது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி நகராட்சி நிா்வாகம் சுகாதாரப் பணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.