கடலூா்: கரோனா பலி 300-ஆக உயா்வு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 300-ஆக சனிக்கிழமை உயா்ந்தது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 300-ஆக சனிக்கிழமை உயா்ந்தது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 27,254 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை புதிதாக 190 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 27,444-ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் சிகிச்சை முடிந்து மேலும் 69 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,964- ஆக உயா்ந்தது.

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கடலூா் நகராட்சியைச் சோ்ந்த 58 வயது ஆண் சனிக்கிழமை உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 300-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 860 பேரும், வெளியூா்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 320 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில்,

இதுவரை மொத்தம் 6.91 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 857 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால் அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாவட்ட நிா்வாகம் அறிவித்து வருகிறது. ஏற்கெனவே 18-ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை தற்போது 30-ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com