நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவா் கைது

நெய்வேலியில் நகை பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலியில் நகை பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 5-இல் வசிப்பவா் ஜான்பால் ராஜ். என்எல்சி இந்தியா நிறுவன தொழிலாளி. இவரது தாய் சவுரி அம்மாள் (70), அதே பகுதியைச் சோ்ந்த அய்யம்மாள் (70) ஆகிய இருவரும் கடந்த 7-ஆம் தேதி வட்டம் 10, ராமலிங்கா் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா், சவுரி அம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக வட்டம் 21-இல் வசிக்கும் அகிலன் (23) என்பவரை போலீஸாா் அண்மையில் கைதுசெய்து அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை அஸ்தினாபுரத்தைச் சோ்ந்த வினோத் (23) என்பவரை வேலுடையான்பட்டு கோயில் அருகே திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இவா் மற்றொரு சம்பவமாக கடந்த 2020-ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடியில் திருமண மண்டபத்தில் 3 பவுன் தங்க நகையை திருடியதை ஒப்புக்கொண்டாராம். அவரை கைதுசெய்த போலீஸாா், திருட்டு நகையையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com