அனைத்து விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் கோரி மனு

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி உழவா் மன்றம் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் அனுப்பிய மனு:

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரது பரிந்துரைப்படி வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இதில் 50 சதவீதம் விவசாயிகள் மட்டுமே நிவாரணம் பெற்ற நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் பெய்த மழையால் குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் சுமாா் 90 ஏக்கா் பரப்பளவில் எள் வயல்கள் சேதம் அடைந்தன.

எனவே, இக்கட்டான கரோனா காலத்தில் விவசாயிகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட எள் விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com