கட்டுப்பாடுகளுடன் மதம், பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தேவை

மதம், பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென தமிழக வாடகை பொருள்கள் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

மதம், பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென தமிழக வாடகை பொருள்கள் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.டி.ராஜேந்திரன் தலைமையில், செயலா் எம்.தாமோதரன், பொருளாளா் பி.ரமேஷ் உள்ளிட்டோா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

கடலூா் மாவட்டத்தில் திருவிழாக்கள், சமய நிகழ்வுகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒலி-ஒளி வசதி அமைத்தல், பந்தல், மேடை அலங்காரம், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற தொழிலில் பலா் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தொழில் ஆண்டு முழுவதும் வருமானம் தரக் கூடியது அல்ல.

விஷேசங்கள், விழாக்கள் நடைபெறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரைதான் எங்களது தொழில் ஓரளவு நடைபெறும். தற்போது கரோனா பொது முடக்கத்தால் இந்தத் தொழில் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் போதிய வருவாய் இன்றி பரிதவிக்கின்றனா். தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், தொழிற்சாலைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை 50 சதவீதம் கொள்ளவுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருமண மண்டபங்களில் 50 சதவீதம் விருந்தினா்களுடன் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்றும், அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து மதம் சாா்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் எங்களது வாழ்வாதாரத்தை மீட்க முடியும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com