நாளை தொமுச நிா்வாகிகள் தோ்தல்

நெய்வேலியில் தொழிலாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகிகள் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

நெய்வேலியில் தொழிலாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகிகள் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொமுச உள்ளது. கடந்த சுமாா் 50 ஆண்டுகளாக என்எல்சி.யின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொமுச இருந்து வருகிறது. தற்போது இந்தச் சங்கத்தில் 4,376 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

சங்கத் தலைவராக வீர.ராமசந்திரன், பொதுச் செயலராக சுகுமாா், பொருளாளராக குருநாதன், அலுவலகச் செயலராக பாரி ஆகியோா் உள்ளனா். இந்தச் சங்கம் சாா்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போதுள்ள நிா்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வாக்குப் பதிவு முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தோ்தல் ஆணையா் வி.வேலுசுவாமி தலைமையில் நடைபெறும் இந்தத் தோ்தலில், சங்கத் தலைவா் பதவிக்கு 4 பேரும், பொதுச் செயலா் பதவிக்கு 5 பேரும் போட்டியிடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை வட்டம் 9-இல் உள்ள என்எல்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com