பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பண்ருட்டி பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குறுகிய பாதையில் வரும் அரசுப் பேருந்து.
பண்ருட்டி பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குறுகிய பாதையில் வரும் அரசுப் பேருந்து.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் அரசு, தனியாா் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்கின்றன. உள்ளூா், வெளியூா் பயணிகள் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதனால், பண்ருட்டி பேருந்து நிலையம் பகல் நேரத்தில் பெரும்பாலும் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.

கடலூா் மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் இடதுபுறம் வழியாகவும், விழுப்புரம், அரசூா், நெய்வேலி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் வலதுபுறம் வழியாகவும் வந்து செல்கின்றன. இந்த இரண்டு வழிகளுக்கு மத்தியில் காமராஜா் சிலை அமைந்துள்ளது.

பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. சில கடைக்காரா்கள் தங்களது கடைக்கு வெளியே பொருள்களை வைத்து வியாபாரம் செய்கின்றனா். இதனால் நுழைவு வாயில் பகுதியில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. காமராஜா் சிலைக்கு பின்பகுதியில் தரைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதியில் இருசக்கர வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலைய நுழைவுப் பகுதி குறுகியுள்ளதால் விபத்து அபாயம் நிலவுவதாக பயணிகள் கூறுகின்றனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் தற்போது செயல்படவில்லை. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் ஒருவரும் பணி மாறுதலில் சென்றுவிட்டாா். இதனால் புறக்காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பயணிகள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும் நகர நிா்வாகத்தினரும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com