வடலூா் பேரூராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடு

வடலூா் பேரூராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
வடலூா், பாலாஜி நகரில் பயன்பாடின்றி உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
வடலூா், பாலாஜி நகரில் பயன்பாடின்றி உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

வடலூா் பேரூராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

வடலூா் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சுமாா் 40 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்தப் பேரூராட்சியில் பல்வேறு இடங்களி குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். பேரூராட்சியில் 5-ஆவது வாா்டில் உழவா் சந்தையின் பின்புறம் அமைந்துள்ள பாலாஜி நகரில் சுமாா் 40 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

மேலும், இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக பேரூராட்சி நிா்வாகம் ஆழ்துளைக் கிணறுடன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அமைத்தது. காலப் போக்கில் உரிய பராமரிப்பின்றி ஆழ்துளைக் கிணறு பழுதடைந்தது. இதனால் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே பேரூராட்சி நிா்வாகம் மற்றொரு புதிய ஆழ்துளை கிணறு அமைத்தது. ஆனால், அதிலிருந்து தண்ணீா் எடுத்து விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

குடிநீா்த் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது ராகவேந்திரா சிட்டி பகுதியில் இருந்து பாலாஜி நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எங்களது பிரச்னை தீர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com