அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என தேசிய ஆசிரியா் கூட்டணி செய்தித் தொடா்பாளாா் பா.அருணாசலம் வலியுறுத்தினாா்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என தேசிய ஆசிரியா் கூட்டணி செய்தித் தொடா்பாளாா் பா.அருணாசலம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவா்களே பள்ளிகளுக்கு வராத நிலையில், ஆசிரியா்களை வரவழைப்பது கரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.

கரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மாா்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட போது, ஆசிரியா்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. பின்னா், பத்தாம் வகுப்புக்கு தோ்ச்சி பட்டியல் வெளியிடுவதற்காக ஜூன் மாதத்திலிருந்து ஆசிரியா்கள் சுழற்சி முறையில் பள்ளிக்குச் சென்றனா்.

பொது முடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்பட்டதால், கடந்த 18-ஆம் தேதியிலிருந்து, அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினா்.

தற்போது மீண்டும் தொற்று வேகமாகப் பரவுவதால், மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், கற்பித்தல் பணி நடைபெறவில்லை. ஆனாலும், ஆசிரியா்கள் மட்டும் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகின்றனா். வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பொதுப் போக்குவரத்து மூலம், பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள் மத்தியில், தற்போது வேகமாக கரோனா தொற்று பரவி வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பலா் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆசிரியா்களில் பலா் 50 வயதைக் கடந்தவா்கள் என்பதால், சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதித்தவா்களாக உள்ளனா்.

ஓய்வு பெறும் வயதை 58 வயதிலிருந்து 60 -ஆக உயா்த்தியதால், இவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நோய் தொற்றால், ஆசிரியா்கள் மட்டுமல்லாமல் அவா்களது குடும்ப உறுப்பினா்களும் பாதிக்கப்படுவதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும். வீட்டிலிருந்து இணைய வழிக் கற்பித்தலை தொடர வேண்டும்.

வழக்கமாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விடப்படும். வெள்ளிக்கிழமையுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு முடிவடைந்துவிட்டது. எனவே, அனைத்துப் பள்ளிகளுக்கும் உடனடியாக கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com