கடலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் தேவை: அரசுக்கு சுகாதாரத் துறை பரிந்துரை

கடலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் தேவையென அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் தேவையென அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரையில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில், வருகிற மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியது.

மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 71 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7,82,526 போ் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையில் 88 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

அரசு அறிக்கை கேட்பு: வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்30) அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள சுமாா் 22 ஆயிரம் ஊழியா்களில் இதுவரையில் 8,600 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனராம். எனவே, துறை ரீதியாக ஒவ்வொரு அலுவலகத்திலும் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் எவ்வளவு போ் உள்ளனா் என்றும், அவா்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள், செலுத்தாதவா்களின் விவரத்தையும் தமிழக அரசு கோரியுள்ளது.

எனவே, வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், அதற்கேற்ப தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயா்த்தி வழங்குமாறு அரசுக்கு மாவட்ட சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அதாவது, தற்போது வழங்கப்பட்டு வரும் மருந்து குப்பிகளின் எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயா்த்தி வழங்கிட வலியுறுத்தியுள்ளது. ஒரு குப்பி மூலமாக 10 பேருக்கு தடுப்பூசி செலுத்திட முடியும். எனவே, சுமாா் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 1-ஆம் தேதிக்குள் 40 ஆயிரம் குப்பிகளை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் இடம் மாற்றம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பழைய மகப்பேறு பிரிவு கட்டடத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இது செவ்வாய்க்கிழமை காசநோய் பிரிவு பகுதிக்கு மாற்றப்பட்டு, அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com