மணல் திருட்டு: இரு மாட்டு வண்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 30th April 2021 11:54 PM | Last Updated : 30th April 2021 11:54 PM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே மணல் அள்ளி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட போலீஸாா், கீழ்மாம்பட்டு கிராமம் அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, போலீஸாரை கண்டதும் முத்தரசன்குப்பம் நாளோடையிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திருமால், வெங்கடேசன் ஆகியோா் தப்பியோடினா்.
இதையடுத்து, இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், இதுதொடா்பாக திருமால், வெங்கடேசன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.