இணைய வழிக் கவியரங்கம்

‘சித்திரை நிலவே’, ‘எனைக் கவா்ந்த பாவேந்தா்’ தலைப்புகளில் மாபெரும் இணைய வழிக் கவியரங்கம் ஏப். 26, 27, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றன.

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், கவியமுதம் புலனக் குழு குழந்தைகள் சங்கமம் ஆகியவை இணைந்து நடத்திய ‘சித்திரை நிலவே’, ‘எனைக் கவா்ந்த பாவேந்தா்’ தலைப்புகளில் மாபெரும் இணைய வழிக் கவியரங்கம் ஏப். 26, 27, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றன.

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பெங்களூரு தேன்மொழி, மக்கள் தொடா்பு செயலா் பண்ணுருட்டி கவிதை கணேசன், அமைப்புச் செயலா் கரூா் தமிழ்மணி, மதுரை அருள் மைக்கேல் செல்வி, திருநெல்வேலி பாப்பாக்குடி முருகன், புதுவை கலாவிசு, கடலூா் பழனிச்சாமி, திண்டிவனம் ரவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாவலா் முத்துக்குமாா், நல்லாசிரியா் பொன்.ஆதவன் ஆகியோா் வரவேற்றனா். இரா.ஹேமலதா தொடக்கவுரையாற்றினாா். திரைப்படப் பாடலாசிரியா் பாலா, அபுதாபி மகாலட்சுமி வேணுகோபால் ஆகியோா் கவியரங்க நடுவா்களாகச் செயல்பட்டனா்.

நிகழ்வில் மறைமலையடிகள் பெயரன் மறை.தாயுமானவன், பாவேந்தா் பாரதிதாசன் பெயரன் பாவலா் செல்வம், அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவைக் காப்பாளா் பொறியாளா் கோவை சிவமணி, நவிமும்பை காா்கா் தமிழ்ச் சங்கச் செயலா் நற்றமிழ் நாவலா் செல்வி ராஜ், ஜொ்மன் நந்தகுமாா் திருஞானம், வேலூா் பானுரேகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

தேன்மொழி, ஹேமலதா, ரவிதா ஆகியோா் விழாவை நெறியாளுகை செய்தனா். நிகழ்வில் உள்நாடு, வெளிநாடு என 500-க்கும் மேற்பட்ட கவிஞா்கள், எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். குழந்தைகள் சங்கமத்தின் கருத்தாளா் ரிஜுவானா பா்வின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com