பெண் தற்கொலை
By DIN | Published On : 30th April 2021 07:37 AM | Last Updated : 30th April 2021 07:37 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு காவல் சரகம், பாலூா் பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் சரவணன். இவரது மனைவி லட்சுமி (51). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லையாம். இந்த நிலையில், தனது இரண்டாவது மகன் கண்ணனுக்கு (25) திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை லட்சுமி செய்தாராம். ஆனால், கண்ணன்திருமணத்துக்கு மறுத்துவிட்டாராம்.
இதனால் லட்சுமி மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி லட்சுமி விஷம் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது கணவா் சரவணன் அளித்து புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.