சிதம்பரம் விவசாயிகள் தில்லி பயணம்
By DIN | Published On : 04th August 2021 08:39 AM | Last Updated : 04th August 2021 08:39 AM | அ+அ அ- |

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பங்கேற்கும் வகையில் காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் 9 போ் ஜாகிா் உசேன் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனா். இதையொட்டி நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்ச்சியில் (படம்) விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ராஜா, கீரப்பாளையம் ஒன்றியச் செயலா் வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.