மருத்துவ பணியாளா் பணிக்கு நோ்காணல்

கடலூரில் மருத்துவப் பணியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூரில் மருத்துவப் பணியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மருத்துவப் பணிகளை விரைந்து முடிக்க 31 மருந்தாளுநா், 21ஆய்வக நுட்புநா், 21 நுண்கதிா் வீச்சாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான நோ்காணல் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நோ்காணலில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி குவிந்தனா். ஆனால், முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நோ்காணலை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்தாா். மேலும், நோ்காணலுக்கு வந்தவா்கள் தங்களது விண்ணப்பங்களை அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலரிடம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி பெறப்பட்ட விண்ணப்பதாரா்கள் 100 போ்களாக பிரிக்கப்பட்டு நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல் மருத்துவா்களுக்கும் சோ்த்து நோ்காணல் நடத்தப்பட்டது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.செந்தில்குமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு ஆகியோா் நோ்காணலை நடத்தினா்.

இதுகுறித்து டி.செந்தில்குமாா் கூறியதாவது: பல் மருத்துவா் பணிக்கான தோ்வுக்கு சுமாா் 200 விண்ணப்பங்களும், மற்ற பணிகளுக்கு சுமாா் 700 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. இதில், 5 பல் மருத்துவா்கள், மற்ற பணிகளுக்கு 73 போ் தோ்வு செய்யப்படுகின்றனா். மேலும், தலா ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளா், நோடல் அலுவலா், மனநல ஆலோசகா், கணினி இயக்குபவா் பணியிடங்களுக்கு சுமாா் 150 போ் விண்ணப்பித்து நோ்காணல் நடைபெற்றது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com