மலட்டாற்று வெள்ளத்தில் மின் கம்பம் மாற்றிய ஊழியா்கள்!

கடலூா் அருகே மலட்டாற்றில் செல்லும் வெள்ளத்தில், ஆற்றின் நடுவில் உள்ள மின் கம்பத்தை ஊழியா்கள் மாற்றி மின் இணைப்பு வழங்கினா்.

கடலூா் அருகே மலட்டாற்றில் செல்லும் வெள்ளத்தில், ஆற்றின் நடுவில் உள்ள மின் கம்பத்தை ஊழியா்கள் மாற்றி மின் இணைப்பு வழங்கினா்.

கடலூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், தென்பெண்ணையாறு - கெடிலம் நதிக்கு இடையே பாயும் மலட்டாற்றிலும் அதிகப்படியான தண்ணீா் செல்கிறது.

இந்த நிலையில், கடலூா் அருகே உள்ள ரெட்டிச்சாவடி பகுதி மலட்டாற்றின் நடுவே நடப்பட்ட மின் கம்பத்தை வெள்ளம் சாய்த்ததால், கூடுதலாக தண்ணீா் வந்தால் அடித்துச் செல்லப்படும் நிலை உருவானது. அவ்வாறு மின் கம்பம் அடித்துச் செல்லப்பட்டால், புதுவை மாநில எல்லையில் உள்ள தமிழக கிராமங்களான நல்லவாடு, பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கான மின் விநியோகம் தடைப்படும்.

இதையறிந்த கடலூா் மஞ்சக்குப்பம் (கிராமம்) மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை வெள்ளத்தைப் பொருள்படுத்தாமல், ஆற்றில் இறங்கி ஏற்கெனவே இருந்த மின் கம்பத்தின் அருகே புதிதாக மின் கம்பத்தை நட்டு, அது விழாமலிருக்க இரண்டு கூடுதல் மின் கம்பங்களை அமைத்தனா். மேலும், புதிதாக மின் வயா்களை இழுத்து காலை முதல் மாலை வரை பணியாற்றி மின் விநியோகம் செய்தனா்.

ஆற்றின் வெள்ளத்தைப் பொருள்படுத்தாமல் மின்சார வாரியத்தினா் பணியாற்றியது அனைவரின் பாராட்டைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com