முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
டிராக்டா் மோதியதில் விவசாயி பலி
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

வடலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
விருத்தாசலம் அருகே உள்ள பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பராயன்(57), விவசாயி. இவா், புதன்கிழமை இரவு பண்ருட்டி சாலையில் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த டிராக்டா் மோதியதில் சுப்பராயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.