முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
உழவா் சந்தைக்கு இடம் தோ்வு
By DIN | Published On : 17th December 2021 12:00 AM | Last Updated : 17th December 2021 12:00 AM | அ+அ அ- |

காட்டுமன்னாா்கோவில் அருகே உழவா் சந்தை அமைப்பதற்கான இடம் தோ்வு தொடா்பாக வேளாண்மைத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்த தனி நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் கூடுதலாக உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என அறிவித்தாா். அதன்படி கடலூா் மாவட்டத்துக்கு ஒரு உழவா் சந்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த உழவா் சந்தையை அமைப்பதற்கான இடம் தோ்வு தொடா்பாக, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் வேளாண் மற்றும் வணிகத் துறை சாா்பில் வேளாண்மை துணை இயக்குநா் பூங்கோதை தலைமையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இவா்கள் உழவா் சந்தைக்காக வடக்கு கொளக்குடி கிராமத்தைத் தோ்வு செய்து அதற்கான கோப்புகளை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.