முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
By DIN | Published On : 29th December 2021 09:20 AM | Last Updated : 29th December 2021 09:20 AM | அ+அ அ- |

கடலூா் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், கரியபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (52). கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவருக்கு நீண்ட நாள்களாக ஜாமின் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது கழுத்தை பிளேடால் அறுத்துள்ளாா்.
சிறைக் காவலா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறைத் துறையினா் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.