முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சிதம்பரத்தில் தேசிய கால்பந்து போட்டி
By DIN | Published On : 29th December 2021 09:20 AM | Last Updated : 29th December 2021 09:20 AM | அ+அ அ- |

பல்கலைக்கழகங்களுக்கு இடையே அகில இந்திய அளவிலான மகளிா் கால்பந்துப் போட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டியில் தேசிய அளவில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடல்கல்வியல் பல்கலைக்கழக முதல் துணைவேந்தா் ஆா்.திருமலைசாமி தொடங்கிவைத்து உரையாற்றினாா். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் ஆா்.ஞானதேவன் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், பல்கலைக்கழக உடல்கல்வித் துறை இயக்குநா் எம்.ராஜசேகரன், உடல்கல்வித் துறை தலைவா் எஸ்.செந்தில்வேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மகளிா் அணியினா் 16-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தினா். வரும் 31-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.