முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
நேரு இளையோா் மைய முப்பெரும் விழா
By DIN | Published On : 29th December 2021 09:20 AM | Last Updated : 29th December 2021 09:20 AM | அ+அ அ- |

விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய கோ.ஐயப்பன் எம்எல்ஏ.
கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் மாவட்ட இளையோா் மாநாடு, மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு, விழிப்புணா்வுப் போட்டிகள் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இளையோா் மைய மாவட்ட அலுவலா் ஆா்.ரிஜேஷ்குமாா் தலைமை வகித்து திட்ட நோக்கவுரையாற்றினாா். மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் பா.சிவா வாழ்த்திப் பேசினாா். கடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் லூ.சந்தானராஜ், அ.அன்னம்மாள், சி.ரிச்சட்ராஜ்குமாா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேற்பாா்வையாளா் க.கதிரவன், தமிழ்நாடு மின்வாரிய உறுப்பினா் ஆா்.காா்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் டி.ரவிச்சந்திரன், ஆதி.பெருமாள் ஆகியோா் கருத்துரை வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையோா் மைய நிா்வாக உதவியாளா் க.ராமமூா்த்தி செய்திருந்தாா். முன்னதாக கணக்கு உதவியாளா் புஷ்பலதா வரவேற்க, தேசிய இளையோா் தொண்டா் சுபஸ்ரீ நன்றி கூறினாா்.