முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மது கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 29th December 2021 09:21 AM | Last Updated : 29th December 2021 09:21 AM | அ+அ அ- |

கடலூரில் காரில் மதுபானம் கடத்தல் தொடா்பாக 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.
கடலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பத்மா, உதவி ஆய்வாளா்கள் அய்யப்பராஜ், சீனிவாசன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் மதுப் புட்டிகள், சாராயம் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. காரிலிருந்த 100 மதுப் புட்டிகள், 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், காரையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காரிலிருந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை கைது செய்தனா். இவா்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியிலிருந்து அரியலூா் பகுதிக்கு மது கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.