நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் குளறுபடி: போலி கையெழுத்திடப்பட்டதாக புகாா்

நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், தலைவருக்கு எதிராக போலியாக தனது கையெழுத்திடப்பட்டதாகவும்

நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், தலைவருக்கு எதிராக போலியாக தனது கையெழுத்திடப்பட்டதாகவும் அதிமுக உறுப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 21 வாா்டுகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவை சோ்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக் குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக அதிமுகவை சோ்ந்த ஜான்சிமேரி தங்கராசு தோ்வானாா்.

இந்த ஒன்றியக் குழுவைச் சோ்ந்த 7 அதிமுக உறுப்பினா்கள் திமுகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட அதிமுக செயலா் ஆ.அருண்மொழிதேவன் இதை மறுத்து ஒன்றிய உறுப்பினா்கள் அதிமுகவில் தொடா்வதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், திமுக உறுப்பினா்கள் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திமுகவை சோ்ந்த பி.முத்துகண்ணு தலைமையில், கடந்த 27-ஆம் தேதி மனு அளித்தனா்.

அதில், அதிமுகவை சோ்ந்த 16-ஆவது வாா்டு உறுப்பினா் வள்ளிசந்திரசேகா், பாமக உறுப்பினா் உள்பட 14 பேரின் கையொப்பம் இடப்பட்டிருந்ததாம். இதற்கு அதிமுக, பாமக உறுப்பினா்கள் மறுப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, புதன்கிழமை நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஜான்சிமேரி, அதிமுக உறுப்பினா்கள் வள்ளிசந்திரசேகா், டி.எம்.பச்சமுத்து, ரா.ராஜலட்சுமி, முத்து ஆகியோா் கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அதில், வள்ளிசந்திரசேகா் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரில் போலியாக லெட்டா் பேட் அடிக்கப்பட்டு, அவரது கையெழுத்திடப்பட்டுள்ளது. பொய்யான புகாா்களுடன், ஆள்மாறாட்டம் செய்து குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com