முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா் மாவட்டத்தில் மழை
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகா்ந்து வருவதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் சுமாா் ஒரு மணியளவில் கடலூரில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதே போல, பண்ருட்டி, சிதம்பரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளி, சனி ( டிச.31, ஜன.1) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது.
முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, கடலூா், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.