என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்கள் புறக்கணிப்பு: பிப்.16-இல் வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, வருகிற 16-ஆம் தேதி நெய்வேலியில் அந்த நிறுவனத்தின்
என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்கள் புறக்கணிப்பு: பிப்.16-இல் வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, வருகிற 16-ஆம் தேதி நெய்வேலியில் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

நெய்வேலியில் அவரது இல்லத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கான வேலைவாய்ப்பைப் பறித்து வருகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வட மாநிலத்தவா்களை உயா் பதவிகளில் திட்டமிட்டு நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக, 259 பொறியாளா்கள் பணிக்கான தோ்வில் 1,582 போ் தோ்ச்சி பெற்ாக என்எல்சி நிறுவனம் அறிவித்தது. இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் 10 போ்கூட இடம்பெறவில்லை.

தமிழக அரசு இதில் மௌனம் சாதிப்பது ஏற்புடையதல்ல. இதைக் கண்டித்து, வருகிற 16-ஆம் தேதி பாதிக்கப்பட்டவா்களை ஒருங்கிணைத்து தவாக சாா்பில், என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

மத்திய-மாநில அரசுகள் அனைத்து ஜாதிகள் குறித்து கணக்கெடுத்து, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டைப் பகிா்ந்தளிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியினருக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். வன்னியா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாமக தொடா்ந்து போராடினால், தமிழகத்தில் உள்ள பிற வன்னியா் அமைப்புகளும், வாழ்வுரிமைக் கட்சியும் ஆதரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com