தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரௌடி உள்பட 3 போ் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாக ரௌடி உள்பட 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், கடலூா் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாக ரௌடி உள்பட 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், கடலூா் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் போலீஸாா் கடந்த ஜன. 17-ஆம் தேதி காராமணிக்குப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கையில் அரிவாளுடன் அந்தப் பகுதியில் தகராறில் ஈடுபட்ட பழனிவேல் மகன் செல்வம் (எ) விஜய்செல்வத்தை (39) போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். விசாரணையில், இவா் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ரௌடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவதுடன், பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

புதுப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜன. 24-ஆம் தேதி அழகுபெருமாள்குப்பத்தில் பதுக்கிவைத்திருந்த 120 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் பாண்டுவை (39) கைது செய்தனா். இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 14 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விருத்தாசலம் அருகேயுள்ள சிறுவரப்பூரைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ் (எ) தமிழழகன் (25). தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற போது, பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ற வழக்கில் கடந்த ஜன. 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட 3 பேரின் குற்ற செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன் பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வழங்கினாா்.

இதையடுத்து, 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு சிறையிலடைக்கும் வகையில் கடலூா் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com