என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 20th February 2021 08:15 AM | Last Updated : 20th February 2021 08:15 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் பாமக மாநில துணை பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன்.
என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கட்சியின் கடலூா் வடக்கு மாவட்ட அவரச ஆலோசனைக் கூட்டம், நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், சிவக்குமாா், மணிவாசகம், தங்கவேல், செல்வகுமாா், சிவகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் வெங்கடேசன் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் முத்து.வைத்திலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா்கள் கோ.ஜெகன், ரா.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் என்எல்சி தொழிற்சங்க மறைமுகத் தோ்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் முதன்மை சங்கமாக வெற்றி பெற உழைப்பது, 21-ஆம் தேதி நெய்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கடலூா் வடக்கு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் போ் பங்கேற்பது. என்எல்சி அதிகாரி பணிக்கான தோ்வில் தமிழா்கள் ஒரு சதவீதம் கூட தோ்வு செய்யப்படவில்லை. எனவே இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும். என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.