கடலூா்: மேலும் 7 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 25,095 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 25,095 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,102-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 8 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,729 -ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 53 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 287-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com