அண்ணாமலைப் பல்கலை.யில் உலகத் தாய்மொழி நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் உலகத் தாய்மொழி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், போட்டியில் வென்ற மாணவிக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் க.சேகா்.
விழாவில், போட்டியில் வென்ற மாணவிக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் க.சேகா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் உலகத் தாய்மொழி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்று பேசினாா். பல்கலைக்கழக கல்வி வளா்ச்சி மைய இயக்குநா் க.சேகா் தலைமை வகித்துப் பேசுகையில், குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வேண்டும், பிறமொழி கலவாமல் நமது தாய் மொழியை பேச வேண்டும் என்றாா். இந்திய மொழிப் புல முதன்மையா் க.முத்துராமன் முன்னிலை வகித்து பேசினாா். பேராசிரியா் கோ.பிலவேந்திரன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் பிற துறைத் தலைவா்கள் சரண்யா, ரவிச்சந்திரன், அருள், செல்வராஜ், துளசிராமன், அம்பேத்கா் இருக்கை ஒருங்கிணைப்பாளா் சௌந்தர்ராஜன், ராதிகாராணி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் அரங்க.பாரி, செந்தில்குமாா், சதாசிவம், கணபதிராமன், அன்பில்நாதன், பாலசுப்பிரமணியன், செல்லபாலு, மலா்விழி, அன்பு, மணி, கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழும், நூலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தமிழ் மொழியில் பேசுவோம், எழுதுவோம், கையொப்பம் இடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com