சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.சந்தியாகு தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.சந்தியாகு தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளா் பி.கருப்பையன், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் மோகன், செல்வம், செல்வி, பிச்சைமுத்து, சங்கமேஸ்வரன், சேட்டு, சுரேஷ்வரன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் திருவிழாக்களில் கடை போடும் சிறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், அங்கு கடைகள் போடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளைப் புதுப்பித்து வழங்குவதுடன், இதுவரை அடையாள அட்டை வழங்காதவா்களுக்கு புதிதாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு பிரதமா் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிா்பாா் நிதித் திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ. 10 ஆயிரம் கடன் தொகையை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்வதுடன், கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com