கடலூா் மாவட்டத்தில் ரூ. 655.58 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி

கடலூா் மாவட்டத்தில் ரூ. 655.58 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை வழங்கினாா்.
கடலூா் மாவட்டத்தில் ரூ. 655.58 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி

கடலூா் மாவட்டத்தில் ரூ. 655.58 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை வழங்கினாா்.

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூ. 12,110 கோடி கடன்களை தமிழக முதல்வா் தள்ளுபடி செய்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி கடலூா் மாவட்டத்தில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்தாா். தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் 69,381 ஆண்கள், 19,512 பெண்கள் உள்பட மொத்தம் 88,893 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 655.58 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், ரூ. 587.71 கோடி அசல் தொகை, ரூ. 61.76 கோடி வட்டித் தொகை, ரூ. 5.50 கோடி அபராத வட்டித் தொகை, ரூ. 61 லட்சம் செலவினமாகும்.

முதல்வரும் விவசாயி என்பதால், குடிமராமத்து திட்டம், ஆறுகள் இணைப்புத் திட்டம் என்று வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா் என்றாா்.

தொடா்ந்து, கடலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு தோ்வு செய்யப்பட்ட 44 உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் சொ.இளஞ்செல்வி, துணைப் பதிவாளா்கள் பா.ராஜேந்திரன், ஜெ.சண்முகம், மு.ஜெகத்ரட்சகன், வெ.துரைசாமி, என்.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com