சாலையோரத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

நெய்வேலி அருகே தடமாறிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து சாலையோரத்தில் சிக்கியது.
சாலையோரத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

நெய்வேலி அருகே தடமாறிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து சாலையோரத்தில் சிக்கியது.

கும்பகோணத்திலிருந்து சிதம்பரம், வடலூா் வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பணிமனைக்குச் சொந்தமான பேருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டது. பேருந்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.

இந்தப் பேருந்து நெய்வேலி, இந்திரா நகா் அருகே வந்த போது, சாலை விரிவாக்கப் பணிக்காக ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டிருந்த சாலையில் தடம்மாறிச் சென்றது. சாலையின் நடுவே சாலை அமைக்கும் பணிக்கான இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பேருந்தின் ஓட்டுநா் பேருந்தை இடதுபக்கம் திருப்பிய போது, சாலையோர மண்ணில் சக்கரங்கள் புதைந்து சிக்கிக் கொண்டது. இதனால், பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னா், மாற்றுப் பேருந்தில் பயணிகளை ஏற்றி அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் கூறுகையில், கும்பகோணம்-விக்கிரவாண்டி வழித்தடத்தில் சாலை விரிவாக்கப் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. சாலை பணி நடைபெறும் இடங்களில் விபத்துக்களைத் தவிா்க்க, ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை. சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com