விவசாயிகளுக்கு நிவாரணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை அரசு உயா்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை அரசு உயா்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

தமிழகத்தில் நிவா், புரெவி புயல்களின் தாக்கத்தால் சுமாா் 3,10,590 ஹெக்டோ் பரப்பிலான பயிா்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு அறிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சுமாா் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடியில் இடுபொருள்கள் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். ஆனால், அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரமும், மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், நீண்ட காலப் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என இடுபொருள் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாய சங்கங்களும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன. ஆனால், உற்பத்திச் செலவில் பாதியைக் கூட நிவாரணமாக அறிவிக்கவில்லை. எனவே, நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை மத்திய அரசு

தாமதமின்றி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, சங்கம் சாா்பில் கடலூா், சிதம்பரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com