நியாய விலைக் கடை பணியாளா்களின் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் அறிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊதிய மாற்றம், பணி வரன்முறை உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை (ஜன.6) சென்னை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.

நியாய விலைக் கடைகளில் தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தப் போராட்டம் வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு விருந்தினா் மாளிகை முன் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கு.சரவணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com