தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.52 லட்சம்
By DIN | Published On : 07th January 2021 07:10 AM | Last Updated : 07th January 2021 07:10 AM | அ+அ அ- |

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் ஊழியா்கள்.
சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 6 லட்சத்து 52 ஆயிரத்து 908 காணிக்கையாகக் கிடைத்தது.
இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜே.பரணிதரன், செயல் அலுவலா் ஜே.ராஜசரவணக்குமாா், ஆய்வாளா் ராமநாதன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
கோயில் அலுவலா்கள் வாசு, ராஜ்குமாா், முத்துக்குமரன், ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியா்கள், கோயில் பணியாளா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், 6 லட்சத்து 52 ஆயிரத்து 908 ரூபாயை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். மேலும், தங்கம் 42 கிராம் 500 மில்லி, வெள்ளி 95 கிராம் செலுத்தப்பட்டிருந்தது.