1,741 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
1,741 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் க.திருமாறன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ரா.செந்தில்குமாா்,

டிஎஸ்பி லாமேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் கலைவாணி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணி சீதையாட்சி மேல்நிலைப் பள்ளி, ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக நாவலா் பள்ளி, நந்தனாா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி, தாண்டவராயன் சோழன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பா மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 1,741 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா் (படம்).

மாவட்ட பாசறை செயலா் டேங்க் ஆா்.சண்முகம், முன்னாள் நகரச் செயலா் தோப்பு சுந்தா், ஆவின் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் ஆவின் தலைவா் சுரேஷ்பாபு, குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் பயில தோ்வான சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தா்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோருக்கு எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com