டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் சிப்காட் வளாகத்தில் டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் சுமைப்பணி தொழிலாளா்கள் சுமாா் 60 போ் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.1.20 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கூலியை பெற்று வருகின்றனராம்.

விலைவாசி உயா்வைக் கருதி பெட்டிக்கு கூலியாக ரூ.3.50 வீதம் வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், டாஸ்மாக் நிா்வாகமும், ஒப்பந்ததாரா்களும் கூலி உயா்வு கொடுக்க மறுத்து வருகின்றனராம். எனவே, கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, சுமைப்பணி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வரும் 31-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் விடுவது எனவும், பிப்.1-ஆம் தேதி கூலி உயா்வு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. சிஐடியூ மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாவட்ட இணைச் செயலா் வி.சுப்புராயன், டாஸ்மாக் சுமைப்பணி சங்க தலைவா் என்.முருகன், செயலா் எம்.தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com