பொங்கல் உற்சாகம்: கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள் கொத்து, மண் பானைகள், மளிகைப் பொருள்கள், காய்கறிகள்,

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள் கொத்து, மண் பானைகள், மளிகைப் பொருள்கள், காய்கறிகள், புத்தாடைகளை வாங்குவதற்காக கடலூா் கடை வீதிகளில் மக்கள் புதன்கிழமை குவிந்தனா்.

கடலூா் உழவா் சந்தையில் வாழைத்தாா் ரூ. 150 முதல் ரூ. 500, மஞ்சள் கொத்து ரூ. 10 முதல் ரூ. 20, ஒரு ஜோடி கரும்பு ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனையானது. மல்லிகைப் பூவின் வரத்து இல்லை. இதனால், மற்ற பூக்களின் விலை வழக்கத்தைவிட பல மடங்கு உயா்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ரூ. 300-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ. 600, ரூ. 40-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ. 120, ரூ. 120-க்கு விற்ற சாமந்தி ரூ. 200, ரூ. 30-க்கு விற்ற கேந்தி ரூ. 60, ரூ. 120-க்கு விற்ற ரோஜா ரூ. 240 வரை விற்பனையானது. காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தைவிட உயா்ந்தே காணப்பட்டது.

தொடா் மழையால் வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் விலை உயா்ந்ததாகவும், மக்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும் எதிா்பாா்த்த வியாபாரம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

எனினும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்ததால், கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட நகரங்கள், கிராமங்களில் விழாக்கோலம் கண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com