மண் பானைகள் விற்பனை

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பொங்கலிட மண் பானைகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே மண் பானைகளை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே மண் பானைகளை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பொங்கலிட மண் பானைகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

தமிழா்கள் கொண்டாடும் விழாக்களில் தைப்பொங்கல் விழா முக்கியமானது. பொங்கலன்று புதுப்பானையில், புத்தரிசியிட்டு பொங்கலிட்டு சூரியனுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும் படையலிட்டு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனா்.

இதையொட்டி, புதன்கிழமை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாரித்த பொங்கல் பானைகள், சட்டிகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

நிகழாண்டு வியாழக்கிழமை (ஜன. 14) தைப்பொங்கல் விழாவும், வெள்ளிக்கிழமை (ஜன. 15) மாட்டுப் பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com